‘சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்’.. ‘7 வருடம் விளையாட தடை’.. ஐசிசி அதிரடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 25, 2020 06:43 PM

சூதாட்ட புகாரில் சிக்கிய ஓமன் நாட்டு கிரிக்கெட் வீரர் யூசுப் அப்துல்ரஹீம் அல் பலூஷி என்பருக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

ICC bans Oman player for 7 years for attempt at match fixing

ஓமன் நாட்டு கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் யூசுப் அப்துல்ரஹீம் அல் பலூஷி. இவர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றின் போது சக வீரரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சித்தாக ஐசிசி ஊழல் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. மொத்தம் 4 பிரிவுகளில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

யூசுப் சூதாட்ட தரகர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரின் தூண்டுதலின் பெயரிலேயே சக நாட்டு வீரரை யூசுப் சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான குற்றத்தை யூசுப் அப்துல்ட்ரஹீம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தடை விதித்துள்ளது.

Tags : #CRICKET #ICC #OMAN