‘அதெல்லாம் முடியாது’... ‘பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி’... ‘ஐபிஎல் போட்டி தள்ளிப்போகுமா?’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 15, 2020 12:02 AM

ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று ஐசிசியின் கூட்டம் துபாயில் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது.

13th IPL Season start date likely to be delayed after Snubs

ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 13-வது ஐபிஎல் போட்டி வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், ஐசிசியின் முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சவுரவ் கங்குலி உள்பட முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் கலந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் இந்தியாவில் 29-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவிலும் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இருக்க வேண்டும் என்பதால், ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வைக்குமாறு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. இது பிசிசிஐ-க்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என கூறி பிசிசிஐயின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இதனால் அந்தக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கலந்துகொள்ள செல்வதால், ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டியை தள்ளிவைப்பது குறித்து பிசிசிஐ தற்போது ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.