"இந்த டீம் தான் T20 WORLD CUP ஃபைனல்ல பாகிஸ்தான் கூட மோதும்".. இயக்குனர் விக்னேஷ் சிவன் கணிப்பு! வாய்ப்பிருக்கா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Nov 07, 2022 12:09 PM

உலககோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Vignesh Shivan Predict India vs Pakistan in World Cup T20 Final

Also Read | "கிரிக்கெட் பிளேயர்க்கே Tough கொடுப்பாரு போலயே".. ஒற்றைக் கையில் கேட்ச்.. "பாத்த எல்லாருமே ஒரு நிமிஷம் மிரண்டு போய்ட்டாங்க"

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது அரையிறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது.

Vignesh Shivan Predict India vs Pakistan in World Cup T20 Final

இந்த அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  விளையாடுவார்கள். இந்த அரையிறுதி & இறுதிப்போட்டி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் எவை என கணித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vignesh Shivan Predict India vs Pakistan in World Cup T20 Final

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தான் & இந்திய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என குறிப்பிட்டுள்ளார்.

Vignesh Shivan Predict India vs Pakistan in World Cup T20 Final

முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தும் பட்சத்தில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட வாய்ப்புள்ளது.

Also Read | Video : "நீ ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு".. சூறாவளி மாதிரி சுழன்ற 'SKY'.. "எங்க பந்து போட்டாலும் வெளிய தான்"..

Tags : #CRICKET #VIGNESH SHIVAN #INDIA VS PAKISTAN #T20 WORLD CUP #WORLD CUP T20 FINAL #T20 WORLD CUP FINAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vignesh Shivan Predict India vs Pakistan in World Cup T20 Final | Sports News.