‘இது ஒன்னு போதும்.. மனசுல நின்னுட்டீங்க’.. முக்கிய விக்கெட்டை எடுத்துட்டு பாண்ட்யா கொடுத்த ரியாக்ஷன் வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடர் 15-வது சீசனில் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்டிக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் மட்டுமே 39 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி, 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் விளையாடிய முதல் ஐபிஎல் சீசனிலேயே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்த நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்டானார். வழக்கமாக விக்கெட் எடுத்ததும் கொண்டாடும் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய விக்கெட்டை வீழ்த்திய போதிலும், எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) May 29, 2022
Also Read | ‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!