"எங்க அப்பா, அம்மா'வ பார்த்து.." சிறு வயதில் பட்ட அவமானங்கள்.. மனம் திறந்த சஞ்சு சாம்சன்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | May 04, 2022 12:22 AM

நடப்பு ஐபிஎல் தொடரில், புதிய அணிகளான லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

Sanju samson about how his parents insulted during his childhood

இதற்கு அடுத்தபடியாக, பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த அணியை சஞ்சு சாம்சன் தலைமை தாங்கி வருகிறார்.

ராஜஸ்தான் அணியில்  பட்லர், சாம்சன், ஹெட்மயர், சாஹல், அஸ்வின், போல்ட், ப்ரஷித் என பல வீரர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளதால், இந்த முறை கோப்பையைக் கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகவும் ராஜஸ்தான் கருதப்படுகிறது.

நடுவே பட்ட கஷ்டம்

இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது கிரிக்கெட் பயணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 20 வயதில் இந்திய அணியில் அறிமுகமான சாம்சனுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இதற்கு நடுவே, கேரள அணியிலும் அவருக்கு இடமில்லாமல் போனது. 25 வயதில் மீண்டும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே, தற்போது ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.

இனி வரும் சர்வதேச தொடர்களிலும் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தனது கிரிக்கெட்டுக்கு வேண்டி, பெற்றோர்கள் பட்ட கஷ்டம் பற்றி மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார். தனது சிறு வயதில், ஆரம்ப கால கிரிக்கெட் பயணத்தை டெல்லியில் தொடங்கி இருந்தார் சாம்சன்.

எல்லாரும் கிண்டல் பண்ணாங்க..

அப்போது நடந்த சம்பவம் பற்றி பேசிய சாம்சன், "டெல்லியில் இருந்த போது, எனது தாய் மற்றும் தந்தை ஆகியோர், அதிக எடையுள்ள எனது கிட் பேக்கை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை வருவார்கள். அந்த சமயத்தில், பின்னால் இருந்து, 'அங்க பாரு. சச்சினும், அவரின் தந்தையும் செல்கிறார்கள். அவன் டெண்டுல்கர் ஆகிடுவானா?' என யாராவது பேசுவார்கள். இப்படி பல கிண்டல்களையும் அவர்கள் சகித்து வந்துள்ளனர்.

அப்பா எடுத்த முடிவு...

ஆனால், எனது பெற்றோர்களும், குறிப்பாக எனது சகோதரரும் நான் இந்திய அணிக்காக ஆடுவேன் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தனர். எனது அப்பா டெல்லி போலீசில் இருந்தார். அப்போது இரண்டு முறை, உள்ளூர் போட்டிகளில் முயற்சி செய்து, எனக்கும் என் சகோதரருக்கும் வாய்ப்பு  கிடைக்காததால், கேரளாவில் சென்று எங்களது வாய்ப்பினை முயற்சிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், டெல்லி போலீசில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற எனது தந்தை, கேரளாவுக்கு வந்து என்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.

அது ஒரு சவாலான நேரம். ஆனால், எங்களுக்காக தான் அவர்கள் போராடுகிறார்கள் என்பதை எங்களுக்கு உணராமல் பார்த்துக் கொண்டனர்" என சாம்சன் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #SANJU SAMSON #PARENTS #RAJASTHAN ROYALS #சஞ்சு சாம்சன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sanju samson about how his parents insulted during his childhood | Sports News.