"அந்த ஒரு ஓவர்'ல தான் மேட்ச் மாறிடுச்சு".. சாம்சன் இருந்தும் அரங்கேறிய சிக்கல்??.. இந்தியா கூட ஜெயிச்சு இருக்கும் போலயே"!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் ஆரம்பமாகி உள்ளது.

Also Read | இலக்கியத்துக்கான நோபல் பரிசு.. உலகத்தை தன் எழுத்தால் அசைத்துப் பார்த்த அனி எர்னாக்ஸ்.. யாருப்பா இவங்க..!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் தொடரில் நேற்று (06.10.2022) களமிறங்கி இருந்தது. மேலும் மழை காரணமாக 40 ஓவர்களாக இந்த போட்டி குறைக்கப்பட்டிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசீன் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். மில்லர் 75 ரன்களும், கிளாசீன் 74 ரன்களும் எடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணியும் 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரை சதமடித்திருந்தனர். இருந்த போதும், 40 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் சேர்க்க முடிந்தது. அதிலும் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிற்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது, அதில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி அடித்த சாம்சனால் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தது.
இதனிடையே, கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன், 39 ஆவது ஓவரில் ஒரு விஷயத்தை சரியாக செய்திருந்தால் இந்திய அணி வெற்றி கூட பெற்றிருக்கும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டு வருகின்றனர்.
கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ரபாடா வீசிய 39 ஆவது ஓவரை எதிர்கொண்ட ஆவேஷ் கான், முதல் இரண்டு பந்துகளில் ரன் அடிக்கவில்லை. மூன்றாவது பந்தில் 2 ரன் எடுக்க, நான்காவது பந்தை மீண்டும் டாட் செய்தார் ஆவேஷ். அடுத்து ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய ரவி பிஷ்னோய் 4 ரன்கள் எடுத்தார். ரபாடா ஒரு நோ பாலும் வீச, அந்த ஓவரில் 7 ரன்கள் தான் சேர்க்கப்பட்டது.
இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட எதிர்கொள்வில்லை. முதலிலேயே பேசி முடிவு எடுத்து இந்த ஓவரில் சஞ்சு ஸ்ட்ரைக் எடுக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல, மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய போது அதனை ஒரு ரன்னாக மாற்றி சஞ்சு சாம்சன் மீதமுள்ள பந்துகளை எதிர்கொள்ள முயற்சித்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அப்படி நடந்திருந்தால் போட்டியின் முடிவு கூட மாறும் வாய்ப்பு உருவாகி இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் நிபுணர்களும் தங்களின் பார்வை குறித்து கருத்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
