"முதல் BALL'ல கூட அப்படி பண்ணுவான்.." ரிஷப் பண்ட் வந்ததும்.. சாம்சனிடம் தமிழில் பேசிய அஸ்வின்.. 'வைரல்' வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டியில், இன்று (22.04.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி, ஆரம்பத்தில் நிதானமாக தொடங்கி பின் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது.
தேவ்தத் படிக்கல் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து தூள் கிளப்பி இருந்தது. படிக்கல் 54 ரன்களும், பட்லர் 116 ரன்கள் எடுத்திருந்தார்.
மீண்டும் சதமடித்த பட்லர்
இந்த தொடரில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 491 ரன்கள் சேர்த்துள்ள பட்லர், மொத்தம் 3 சதங்களையும் (மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராக) அடித்துள்ளார். அதிலும் கடைசி இரண்டு போட்டிகளிலும், அவர் தொடர்ந்து சதமடித்து பீஸ்ட் மோடில் உள்ளார். கடைசியில், ராஜஸ்தான் கேப்டன் சாம்சனும் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்திருந்தது.
முக்கிய விக்கெட்டுகளை இழந்த டெல்லி
தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடி வரும் டெல்லி அணி, அதிரடியாக ஆடி ரன் குவித்து வந்தாலும் வார்னர், ஷர்பராஸ் கான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வீசிய முதல் பந்திலேயே ஷர்பராஸ் கான் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதே போல, பிரித்வி ஷாவின் விக்கெட்டையும் அஸ்வின் எடுத்திருந்தார்.
தமிழில் பேசிய அஸ்வின்
இன்னொரு பக்கம், வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை பிரஷித் கிருஷ்ணா எடுத்துள்ளார். இந்நிலையில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, கீப்பர் சஞ்சு சாம்சனிடம் அஸ்வின் தமிழில் பேசிய விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் தமிழில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தமிழ் தெரிந்தவர்கள் இல்லை என்னும் பட்சத்தில் இது நிச்சயம் கை கொடுக்கும்.
அந்த வகையில், தமிழ் தெரியாத ரிஷப் பண்ட் மற்றும் பிரித்வி ஷா களத்தில் இருக்க, கேரள மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனிடம் தமிழில் பேசிய அஸ்வின், "எறங்குனான்னா இந்த பக்கமும் அந்த பக்கமும் பாத்துக்கோ. ஃபர்ஸ்ட் பாலே கூட எறங்குவான்" என கூறினார். அதாவது, ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட பார்க்கும் ரிஷப் பண்ட்டை ஸ்டம்பிங் செய்வதில் கவனமாக இருக்க தான் தமிழில் அஸ்வின் அறிவுறுத்தினார்.
Ashwin and Sanju Samson Tamil conversation@ashwinravi99 @IamSanjuSamson @SriniMaama16 😂😂😂 pic.twitter.com/xeiEvn7ht4
— Bala Mahesh (@mahesh2me) April 22, 2022
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
