"அத தெரிஞ்சுக்கவா சாம்சன் 'DRS' எடுத்தாரு??.." நடுவர் முடிவால் உருவான 'சர்ச்சை'?.. விமர்சிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதி இருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக கேப்டன் சாம்சன் 54 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி தரப்பில், டிம் சவுதி 2 விக்கெட்டுகளும், உமேஷ், அங்குல் ராய் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.
மீண்டு வந்த 'KKR'
இதனையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, தொடக்க ஜோடியின் விக்கெட்டுகளை சிறிய இடைவெளியில் இழந்தது. ஆனாலும், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அசத்தி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஆட்ட நாயகன் விருதினை ரிங்கு சிங் வென்றிருந்தார்.
கடைசியாக ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளது. 10 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா, அதில் நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. மறுபக்கம், பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த ராஜஸ்தான், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
போட்டிக்கு நடுவே 'சர்ச்சை'
இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா போட்டிகளின் இடையே நடந்த சம்பவம் ஒன்று, அதிகம் சர்சைகளை உருவாக்கி உள்ளது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடிக் கொண்டிருந்த போது, 19 ஆவது ஓவரை ராஜஸ்தான் வீரர் பிரஷித் கிருஷ்ணா வீசினார். அப்போது, அவர் வீசிய 3 ஆவது பந்தை நடுவர் வைடு என அறிவித்தார்.
'DRS' எடுத்த சாம்சன்
இதனால், பிரஷித் மற்றும் சஞ்சு சாம்சன் ஓரளவு அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, 4 ஆவது பந்தையும் நடுவர் வைடு என அறிவித்தார். இதனால், சஞ்சு சாம்சன் மற்றும் பிரஷித் கிருஷ்ணா இன்னும் அதிருப்தி அடைந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத சாம்சன், நடுவரிடம் இது பற்றி முறையிட்டார். ஆனால், நடுவர் வைடு என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
இதனால், உடனடியாக DRS அப்பீல் செய்தார் சஞ்சு சாம்சன். வைடு பந்தின் போது அவர் எடுத்த இந்த முடிவு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வைடு பந்துக்கு வேண்டி இல்லாமல், அவுட் என்பதற்காக அப்பீல் செய்து, அதில் வைடு என்பது தெரிந்து விடுமா என்பதற்காக சஞ்சு சாம்சன் DRS எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
விமர்சனத்தை சந்திக்கும் நடுவரின் முடிவுகள்
ஆனாலும், வைடு என்பது பரிசோதிக்கப்படவில்லை. இதே ஓவரில், மொத்தம் 3 வைடு பந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், நடுவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் வைடு என்றும், வேறு சிலர் வைடு இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில், நடுவர்கள் எடுத்த பல முடிவுகள், கடும் விமர்சனத்தை பிரபலங்கள் மத்தியிலும் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
