"ஒரு வேளை நான் போய்ட்டா".. ரச்சிதாகிட்ட ராபர்ட் மாஸ்டர் வெச்ச கோரிக்கை.. "இது எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா மாஸ்டர்?"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Nov 27, 2022 03:15 PM

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

robert master about if he eliminate from biggboss to rachitha

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்தும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.

இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. தொடர்ந்து, இந்த டாஸ்க் முடிந்த பிறகு வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், வழக்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

robert master about if he eliminate from biggboss to rachitha

இதனிடையே, ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடந்த உரையாடல் குறித்த விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் அமர்ந்திருக்க, வீட்டிற்கு வெளியே ரச்சிதா, ராம், கதிரவன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அங்கே ரச்சிதா வாக்கிங் சென்று கொண்டிருக்க, அவரை மாதிரியே ராமும் கூட வாக்கிங் சென்று கலாய்க்கிறார். இதனைக் கண்டதும் வீட்டிற்குள் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் வேகமாக கதவு அருகே வந்து நின்று கொள்கிறார்.

இதனை பார்த்ததும், "அங்க பாரு, இவ்ளோ நேரமா உக்காந்துட்டு இருந்த மாஸ்டர் எந்திரிச்சு வந்து கதவுகிட்ட நின்னுட்டாரு பாரு" என சிரித்துக் கொண்டே ராம் சொல்கிறார். ரச்சிதாவுடன் இணைந்து வாக்கிங் போவது குறித்தும் ராமிடம் கேட்கிறார் ராபர்ட். இதற்கு மத்தியில், ராபர்ட் அருகே வரும் ரச்சிதா, "என்ன அங்க இருந்து ஓடி வந்தீங்களே?" என கேட்ட பிறகு, தான் வாக்கிங் போவதை ராம் கலாய்ப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

robert master about if he eliminate from biggboss to rachitha

இதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற பிறகு ரச்சிதாவிடம் பேசும் ராபர்ட், "வரும் போது பயங்கரமா வந்தே. இப்போ சுருங்கிட்டே. ஆப்பிள்., அது இதுன்னு சும்மா சாப்பிட்டா?" என கூறுகிறார். "யாரு, நானு?. சுருங்குனது?" என ரச்சிதாவும் பதில் கேள்வி கேட்கிறார்.

இதன் பின்னர் பேசும் ராபர்ட் மாஸ்டர், வரும் போது பயன்படுத்திய பச்சை கலர் ஜாக்கெட்டை போட்டு பார்க்கும் படியும் ரச்சிதாவிடம் கூற, சமீபத்தில் அதனை போட்டேன் என்றும் உடம்பு குறைந்தது போல தோன்றாமல் ஃபிட்டாக தான் இருந்ததாகவும் ரச்சிதா கூறுகிறார்.

robert master about if he eliminate from biggboss to rachitha

இறுதியில், "ஒரு வேளை நான் போய்ட்டா, எப்பயாவது ஒருவாட்டி இங்க உக்காந்து சாப்பிடு (ராபர்ட் மாஸ்டர் சாப்பிடும் இடம்). நான் பார்ப்பேன்" என ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் கூறுகிறார். அப்படி சொன்னதும் சிரித்த ரச்சிதா, "மாஸ்டர், இது எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா?" என்றதும்,. "போகும் போது எனக்கு புடிச்சவங்க ஒரு 4 பேருகிட்ட டைம் இருந்தா இங்க இருந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு போவேன்" என்கிறார் ராபர்ட் மாஸ்டர்.

Tags : #ROBERT MASTER #RACHITHA #BIGG BOSS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Robert master about if he eliminate from biggboss to rachitha | Tamil Nadu News.