"இத மட்டுமே மனசுல வெச்சிட்டு 'பவுலிங்' போட்டா எப்படிங்க??.." 'அஸ்வின்' மீது 'முன்னாள்' வீரர் வைத்த 'விமர்சனம்'.. 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தது. பவுலிங் மோசமாக அமைந்ததன் காரணமாக, சென்னை அணி தோல்வியைத் தழுவியிது. அதே போல, டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (Ashwin), மிக மோசமாக பந்து வீசியிருந்தார். 4 ஓவர்கள் வீசிய அவர், 47 ரன்களை வாரி வழங்கினார்.
இந்நிலையில், அஸ்வினின் பந்து வீச்சு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar) விமர்சனம் செய்துள்ளார. 'டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, டெஸ்ட் என்றாலும், டி 20 போட்டிகள் என்றாலும் ஒரே மாதிரி பந்து வீசக் கூடியவர். தன்னுடைய வலிமை என்பதை மட்டும் தான் செய்வார்.
ஆனால், அஸ்வின் அப்படியில்லை. அவர் போட்டிக்கு ஏற்றது போல, மாற்றி மாற்றி பவுலிங் செய்யக் கூடியவர். குறிப்பாக, டி 20 போட்டிகளில் அவர் ஆஃப் ஸ்பின் போடுவதே இல்லை. அதற்கு பதிலாக, அவர் புதிய வேரியேஷன்களை காட்டுகிறார்.
விக்கெட்டுகளை எப்படி எடுக்க வேண்டும் என அஸ்வின் நினைக்கவில்லை. மாறாக, தனது பந்துகளில், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என நினைத்து பந்து வீசுகிறார். இதன் காரணமாக, தனக்கு பலம் சேர்க்கும் ஆஃப் ஸ்பின் பந்துகளை அவர் வீசுவதில்லை.
இதனால் தான், டி 20 போட்டிகளில் அஸ்வின் அதிகம் சொதப்புகிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் களமிறங்கும் அஸ்வினை, டி 20 போட்டிகளிலும் களமிறக்க வேண்டும் என பலர் கூறுகிறார்கள்.
ஆனால், நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் பார்க்கும் அஸ்வினும், டி 20 போட்டிகளில் பார்க்கும் அஸ்வினும் ஒரே அஸ்வின் கிடையாது. இரு அஸ்வினுக்கும், பவுலிங்கில் ஒரே விதமான பலமில்லை' என அஸ்வினின் டி 20 போட்டி பந்துவீச்சு குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
