திடீரென விலகிய 'ஹேசல்வுட்'.. "அவருக்கு பதிலா களமிறங்க போறது இவரு தான்.." வெளியான அதிகாரபூர்வ 'தகவல்'.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சிஎஸ்கே 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை சந்திக்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த சென்னை அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், முதல் முறையாக வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி உள்ளிட்ட அணியின் பல விஷயங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்திருந்தது.
இதனால், இந்த முறை நிச்சயம் பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டிய முனைப்பில் சென்னை அணி உள்ளது. ரெய்னா இந்த சீசனில் மீண்டும் சென்னை அணிக்காக களமிறங்கவுள்ள நிலையில், மொயின் அலி, புஜாரா உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இதனிடையே, சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் (Hazlewood), திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர்.
ஹேசல்வுட்டிற்கு பதிலாக, எந்த மாற்று வீரரை சென்னை அணி களமிறக்கவுள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெக்ரன்டார்ஃப் (Jason Behrendorff) என்பவரை அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில், இதற்கு முன்பாக ஜேசன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடியுள்ளார்.
Jason is all of us right now!
J Behrendorff joins the super lion up for this #Summerof2021 !
Read more : https://t.co/Xe1WU7WWvu#WhistlePodu #Yellove 🦁💛
📸@ICC pic.twitter.com/qYSjcee932
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2021
ஹேசல்வுட்டிற்கு பதிலாக, பெக்ரன்டார்ஃப் சென்னை அணியில் இணைந்துள்ளது, நிச்சயம் சென்னை அணியின் பந்து வீச்சிற்கு அதிக பலம் சேர்க்கும் என்பதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
