'பயிற்சி'க்கு நடுவே.. விழுந்து விழுந்து சிரித்த 'UNIVERSAL' பாஸ்.. அப்படி யாருய்யா 'காமெடி' பண்ணது??.. வீடியோ இப்போ செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும், தங்களது அணியினருடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (Chris Gayle), பொதுவாக தன்னைச் சுற்றி இருப்பவர்களை மிகவும் கலகலப்பாக வைத்திருப்பார். ஐபிஎல் தொடர்கள் மட்டுமில்லாது, சர்வதேச போட்டிகளில் மிகவும் ஜாலியாக இருக்கும் கெயிலையே ஒரு இந்திய வீரர் அதிகம் சிரிக்க வைத்துள்ள வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கெயில் உள்ளிட்ட சில வீரர்கள் அங்கு உட்கார்ந்திருந்திருக்க, அந்த அணியில் இடம்பெற்றுள்ள இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டேரன் சேமியைப் போல, செய்து காட்டினார். இதனைக் கண்ட கெயில், சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே, 'ஆமாம், இது டேரன் சேமி தான்' என கூறினார்.
@darensammy88 😅🤭#SaddaPunjab #PunjabKings #IPL2021 #UniverseBoss @Zouksonfire @sarfankhan97 @henrygayle pic.twitter.com/QN6td3EQSd
— Punjab Kings (@PunjabKingsIPL) April 7, 2021
சர்பராஸ் கான் பெங்களூர் அணிக்காக ஆடிய போது, டேரன் சேமியுடன் இணைந்து ஆடியுள்ளார். அதே போல, பஞ்சாப் அணிக்காகவும் இருவரும் இணைந்து ஆடியுள்ளனர்.
அதனை வைத்தே, சேமி செய்வதை பின்பற்றி சர்ப்ராஸ் செய்து காட்டி, கெயிலையும் சிரிக்க வைத்த வீடியோ, தற்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
