"ச்சே, என்னங்க இது?.. முதல் 'மேட்ச்'லயே இப்டி ஆயிடுச்சு??.." 'சிஎஸ்கே' ரசிகர்களை கடுப்பாக்கிய 'சம்பவம்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாளான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 85 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, சென்னை அணியில், சின்ன 'தல' எனப்படும் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), மிகவும் அதிரடியாக ஆடி அரை சதமடித்திருந்தார். கடந்த சீசனில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரெய்னா, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அணிக்காக இன்று களமிறங்கியிருந்தார்.
அதிகம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்த ரெய்னா, இன்றைய போட்டியில் எப்படி ஆடுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், எந்தவித பதற்றமும் இன்றி, மிகவும் அதிரடியாக ஆடி, ரன்களைக் குவித்தார்.
இதனிடையே, 16 ஆவது ஓவரில், ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்தில் இருந்த போது, ஆவேஷ் கான் (Avesh Khan) பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, அதனை 'Square Leg' திசையில் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். முதல் ரன்னை இருவரும் வேகமாக ஓடி எடுத்த நிலையில், இரண்டாவது ரன்னிற்காக இருவரும் வேகமாக ஓட எண்ணினர்.
— Simran (@CowCorner9) April 10, 2021
ஜடேஜா ரன் ஓடிய சமயத்தில், அவரது வழியில் ஆவேஷ் கான் நின்றதால், ஜடேஜா சற்று தடுமாறினார். இதனைக் கவனிக்காமல், வேகமாக ரெய்னா மறுபக்கம் ஓடி வந்த நிலையில், அவர் ரிஷப் பண்ட் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார்.
36 பந்துகளை எதிர்கொண்ட ரெய்னா, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் போட்டியிலேயே, ரெய்னா சிறப்பாக ஆடினாலும், இப்படி அதிர்ஷ்டம் இல்லாத வகையில், அவர் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், இன்னும் நிறைய ரன்களை குவித்திருப்பார் என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
