"போன வருஷம் 'சிஎஸ்கே'ல் இருந்த பிளேயர... 'ஏலத்துல' அலேக்கா நாங்க தூக்கிட்டோம்.. அவர வெச்சு என்ன பண்ணப் போறோம்'ன்னு பாருங்க!.." 'ரோஹித்' உடைத்த 'சீக்ரெட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாளை ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும், மும்பை அணியே கோப்பையை கைப்பற்றி, அசத்தியுள்ள நிலையில், இந்த முறையும் அதே அசுர பலத்துடன் விளங்குகிறது. அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் சிறந்த கலவையுடன் அந்த அணியில் உள்ளதையடுத்து, பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஏலத்தில், பியூஷ் சாவ்லா, ஜிம்மி நீஷம், அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களை எடுத்துள்ளது.
இதில், சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியிருந்த நிலையில், ஏலத்திற்கு முன்பாக அவரை சென்னை அணி விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை அணி அவரை 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், பியூஷ் சாவ்லா தங்களது அணியில் இடம் பிடித்தது பற்றி பேசிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, '19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், நான் விளையாடிய காலத்தில் இருந்து பியூஷ் சாவ்லாவிடம் இணைந்து விளையாடி வருகிறேன். எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் பந்து வீசக் கூடியவர் அவர். அதனால் தான், எங்களது அணியின் சுழற்பந்து வீச்சை இன்னும் பலப்படுத்த அவரை அணியில் எடுத்தோம்.
ஐபிஎல் தொடரில், அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவர் சாவ்லா. அதே போல, அதிகமான ஐபிஎல் போட்டிகளிலும் பியூஷ் சாவ்லா ஆடியுள்ளார். இந்த போட்டியைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். எதிரணி வீரர்கள் யார், அவர்களது பலவீனம் என்ன என்பதும் சாவ்லாவுக்கு தெரியும்' என தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தது பற்றிப் பேசிய பியூஷ் சாவ்லா, 'மும்பை அணி என்னை ஏலத்தில் எடுத்தது பற்றித் தெரிந்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நடப்பு சாம்பியனான ஒரு அணிக்குள், அதுவும் வலிமையான அணிக்குள்ளே இணைந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
