"இதுனால தான்யா 'மும்பை' எப்பவும் மாஸா இருக்காங்க!.." 'ரோஹித்' போட்ட 'மாஸ்டர்' பிளான்.. முதல் 'மேட்ச்'லயே கொடுத்த வேற லெவல் 'ட்விஸ்ட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இன்று மோதி வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, மும்பை அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், மும்பை அணியில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரரான டி காக், சமீபத்தில் மும்பை அணியுடன் இணைந்ததையடுத்து, கொரோனா தொற்றின் காரணமாக, இன்னும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். இதனால், அவரால் முதல் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக கிறிஸ் லின், முதல் முறையாக மும்பை அணிக்காக இன்று களமிறங்கினார்.
அது மட்டுமில்லாமல், யாரும் எதிர்பாராத வகையில், மேலும் ஒரு வீரரை மும்பை அணி இன்று களமிறக்கியது, அனைவருக்கும் ஆச்சரியமளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 வயதேயான இளம் வீரர் மார்கோ ஜென்சன் (Marco Jansen), முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இன்று களமிறங்குகிறார்.
முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டின் போது, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை இந்திய அணி மேற்கொண்டிருந்த சமயத்தில், 17 வயதேயான மார்கோ ஜென்சன், வலைப்பயிற்சியின் போது, கோலியை திணறடிக்கும் வகையில், அவருக்கு பந்து வீசி அசத்தியிருந்தார். மேலும், முதல் தர போட்டிகளில் அதிகம் ஆடியுள்ள மார்கோ ஜென்சன், சர்வதேச போட்டிகளில் ஆடாத நிலையிலும், மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது.
அது மட்டுமில்லாமல், முதல் போட்டியிலேயே இன்று அவருக்கு வாய்ப்பும் கொடுத்து மும்பை அணி அசத்தியுள்ளதால், நிச்சயம் இந்த இளம் வீரர் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.