VIDEO : "ப்பா, அடி ஒவ்வொண்ணும் 'சரவெடி'.." பயிற்சி ஆட்டத்தில் பட்டாசாக வெடித்த 'தமிழக' வீரர்.. "அடுத்த 'சிக்ஸ்' ஹிட்டர் 'ரெடி' ஆயிட்டாரு.." கொண்டாட்டத்தில் 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று முதல் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதால், ஒட்டு மொத்த ரசிகர்களும், இந்த தொடரை எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், ஐபிஎல் போட்டிகளில், அனுபவ வீரர்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பை போலவே, இந்த தொடரின் மூலம் அறிமுகமாகவுள்ள இளம் வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சீசனில் தேவ்தத் படிக்கல், நடராஜன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
அதே போல, இந்த சீசனிலும் முகமது அசாருதீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஷாருக்கான் உள்ளிட்ட இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரில், தடம் பதிக்க ஆர்வமாக உள்ளனர். இதில், தமிழக வீரரான ஷாருக்கான் (Shahrukh Khan), சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில், தமிழக அணிக்காக மிகச் சிறப்பாக ஆடியிருந்தார். இந்த தொடரை, தமிழக அணி கைப்பற்றியிருந்த நிலையில், அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ஷாருக்கான்.
தொடக்கம் முதலே அதிரடியுடன் ஆடும் ஷாருக்கானை, பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தது. ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வரும் ஷாருக்கான், பயிற்சியின் போது மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.
பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசும் ஷாருக்கான், எந்த இடத்திலும் கொஞ்சம் கூட திணறல் இல்லாமல் ஆடி வருவதால், நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என தெரிகிறது. ரசல், கெயில், டிவில்லியர்ஸ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் வரிசையில், ஷாருக்கானும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
📹 | Shahrukh, our new six-hitting machine doesn’t want to settle for a four! 😱#SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/jes3lTgUUL
— Punjab Kings (@PunjabKingsIPL) April 8, 2021
ஷாருக்கான் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை, பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, 'எங்களது அணியின் புதிய சிக்ஸ் ஹிட்டிங் மிஷின்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
