"நானும் என் குடும்பமும் இதை எப்போவும் மறக்கமாட்டோம்".. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஷேர் செய்த உருக்கமான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தற்போது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பெரும் சோகம்
கடந்த அக்டோபர் மாதத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக ரொனால்டோ அறிவித்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை மட்டும் பிறந்து ஆண் குழந்தை இறந்து விட்டதாக ரொனால்டோ சோகத்துடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் "புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்திருப்பதை ஆழ்ந்த சோகத்தோடு தெரிவிக்கிறோம். எந்த பெற்றோரும் உணரக்கூடிய கடுமையான வலி இது. கொஞ்சம் நம்பிக்கையோடும் கொஞ்சம் மகிழ்ச்சியோடும் இந்த தருணத்தில் இருப்பதற்கு காரணம் புதிதாக பிறந்த பெண் குழந்தை தான்" என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்
இதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரொனால்டோவை குறிப்பிட்டு "உங்களுடைய வலி எங்களுடையதும் தான். அன்பையும் ஆதரவையும் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறோம்" என குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலை தளங்கள் வாயிலாக ரொனால்டோவிற்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
உருக்கமான வீடியோ
இந்நிலையில் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் ரொனால்டோவிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கால்பந்து ஆட்டத்தை பார்க்க வந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர். இந்த வீடியோவில் "ஒரு உலகம். ஒரு விளையாட்டு. ஒரு உலகளாவிய குடும்பம். நன்றி ஆன்ஃபீல்டு (Anfield) நானும் என்னுடைய குடும்பமும் இந்த மரியாதையையும் உத்வேகத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோ பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
