"இவ்ளோ ரணகளத்துலயும்.." டாஸ் நேரத்தில் ரோஹித் செஞ்ச சேட்டை.. ஜடேஜா'வால சிரிப்ப நிறுத்தவே முடியல.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 21, 2022 07:50 PM

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த இரு அணிகள் என்றால், நிச்சயம் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான்.

Rohit sharma fun while toss against csk match

ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த இரண்டு அணிகளும், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது. மற்றொரு அணியான மும்பை, ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நெருக்கடியில் மும்பை, சென்னை

இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதிலும் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், இரு அணிகளும் தற்போது மோதி வருகிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு என்பது நிச்சயம் இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தவே அதிக வாய்ப்பு உள்ளது.

Rohit sharma fun while toss against csk match

மும்பைக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதனால், மிக மிக முக்கியமான போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில், மும்பை மற்றும் சென்னை அணிகள் தற்போது ஆடி வருகிறது. மும்பை அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், முதல் ஓவரிலேயே ரோஹித் மற்றும் இஷான் கிஷான் ஆகிய விக்கெட்டுகளை முகேஷ் சவுத்ரி வீழ்த்தி உள்ளார். இதனிடையே, இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர  ஜடேஜா, டாஸ் வென்றதும் பவுலிங்கை தேர்வு செய்தார்.

Rohit sharma fun while toss against csk match

ரோஹித் செய்த சேட்டை

தனது அணியிலுள்ள மாற்றங்கள் குறித்து, ஜடேஜா பேசி விட்டுச் சென்றதும், அடுத்து பேச வந்த ரோஹித் ஷர்மா, ஜடேஜாவிடம் ஜாலியாக, "நீங்க பேட்டிங் தானே பண்ண போறீங்க. ஓகே நீங்களே பேட்டிங் எடுத்துக்கோங்க" என தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், டாஸ் வெல்லும் பெரும்பாலான அணிகள் பந்து வீச்சைத் தான் தேர்வு செய்கின்றன. அந்த வகையில், ஜடேஜாவும் இன்று பந்து வீச்சைத் தான் தேர்வு செய்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு தான் ரோஹித் அப்படி பேசினார்.

Rohit sharma fun while toss against csk match

ஐபிஎல் போட்டிகளில் டாஸ் என்பது முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை ரோஹித் டாஸ் வென்றிருந்தால் கூட, நிச்சயம் பந்து வீச்சைத் தான் தேர்வு செய்திருப்பார். சென்னை அணியில் இன்றைய போட்டியில், மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோருக்கு பதிலாக, டுவைன் பிரெட்டோரியஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் இன்று களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma fun while toss against csk match | Sports News.