“இழந்துட்டோம்.. பெத்தவங்க யாருக்குமே வரக்கூடாத பெரிய வலி”.. பெரும் சோகத்தில் ரொனால்டோ.. வெளியான உருக்கமாக அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல கால்பாந்தாட்ட வீரர் ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ (Cristiano Ronaldo). இவருக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும், ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த சூழலில் ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் மகன் உயிரிழந்ததாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். மேலும் பெண்குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், ‘எங்கள் ஆண் குழந்தை மறைந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறேன். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இப்போது ஓரளவு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளித்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
குழந்தை இழப்பில் நாங்கள் அனைவரும் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தனிமையை கேட்டுக்கொள்கிறோம். மகனே, நீ எங்கள் தேவதை. நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம்’ என ரொனால்டோ உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். தற்போது விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் ரொனால்டோவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
