பொல்லார்ட் காலைத் தொட்டு வணங்கிய பிரபல 'சிஎஸ்கே' வீரர்... 'MUSTAFA MUSTAFA' பாடிய ஐபிஎல் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 21, 2022 08:46 PM

ஐபிஎல் தொடர் என வந்தாலே பலம் வாய்ந்த அணிகளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், நடப்பு சீசனில் தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வருகிறது.

dwayne bravo touches Kieron Pollard feet before ipl match

இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ், ஆடியுள்ள ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி

மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமான சூழலாக மாறியுள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் இரு அணிகளும் நீடிக்க முடியும்.

தொடர்ந்து, தற்போது பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்திருந்தது. தற்போது வரை ஐந்து விக்கெட்டுகள் இழந்துள்ள மும்பை அணி, மெதுவாக ரன் சேர்த்து வருகிறது.

ஓய்வு முடிவை அறிவித்த பொல்லார்ட்

இந்நிலையில், போட்டி ஆர்மபிப்பதற்கு முன்பாக, மும்பை வீரர் பொல்லார்ட் காலை, சென்னை வீரர் ஒருவர் விழுந்து தொட்ட புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி கண்ட அதிரடி வீரர்களில் ஒருவர் பொல்லார்ட். பல போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற பெரிய அளவில் பொல்லார்ட் உதவி செய்துள்ளார்.

இதனிடையே, திடீரென சர்வதேச போட்டியில் இருந்து  பொல்லார்ட் தனது ஓய்வினை அறிவித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி 20 கேப்டனாக இருந்து வந்த பொல்லார்ட், தனது அணிக்காகவும் சிறந்த வீரராக விளங்கி உள்ளார்.அப்படி இருக்கையில், ஓய்வு முடிவினை அவர் அறிவித்திருந்தது, பிரபலங்கள் பலரையும் உருக வைத்திருந்தது. சச்சின், பிராவோ, கெயில் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள், பொல்லார்ட் குறித்து கருத்தினை பகிர்ந்திருந்தார்.

காலில் விழுந்த பிராவோ

அப்படி ஒரு சூழ்நிலையில், இன்றைய போட்டிக்கு முன்பாக மைதானத்தின் அருகே இருந்த பொல்லார்டிடம் பேசிக் கொண்டிருந்த சிஎஸ்கே வீரர் பிராவோ, அவரின் காலில் தொட்டு வணங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத பொல்லார்ட், கையில் இருந்த பேட் மூலம் செல்லமாக தட்டி, பிராவோவை கட்டி அணைத்துக் கொண்டார். பிராவோவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற நிலையில், சர்வதேச போட்டியில் இருந்து அவர் ஓய்வினை முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

Tags : #KIERON POLLARD #DWAYNE BRAVO #IPL 2022 #CSK VS MI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dwayne bravo touches Kieron Pollard feet before ipl match | Sports News.