கைத்தடி உதவியோடு ஐபிஎல் போட்டியை காண வந்த ரிஷப் பண்ட்.. குஜராத் அணி ரூமுக்குள் நுழைந்து மாஸ் பண்ணிட்டாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுIPL தொடர் துவங்கி இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரிஷப் பண்ட், டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியை காண வந்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விபத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் பண்ட். மேலும், தான் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவையும் அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார்.
பண்ட் சிகிச்சையில் இருப்பதால் டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்சர் படேல் துணை கேப்டனாக பணியாற்றுவார் என அந்த அணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்த டெல்லி & குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரிசப் பண்ட் மைதானத்திற்கு வந்திருந்தார். இந்த போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோற்றது. போட்டி முடிந்த பிறகு ரிசப் பண்ட், குஜராத் அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று சுப்மன் கில்லுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை குஜராத் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
A special guest in our dressing room! 💙⚡️#AavaDe #DCvGT pic.twitter.com/m4xlJQQmq3
— Gujarat Titans (@gujarat_titans) April 4, 2023

மற்ற செய்திகள்
