முன்னாள் காதலியின் திருமணம்.. பரிசாக இளைஞர் கொடுத்த பயங்கரம்.. மணமகனுக்கு நேர்ந்த பெரும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Apr 05, 2023 04:34 PM

சத்தீஸ்கர் மாநிலத்தில் விபத்தில் புதுமாப்பிள்ளை மரணமடைந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது தொடர்பாக மணப்பெண்ணின் முன்னாள் காதலரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Man gifted explosive home theater to Ex lover on Marriage

Images are subject to © copyright to their respective owners.

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகில் உள்ள சமாரி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்திர மெராவி. இவருக்கும் அஞ்சனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளூரிலேயே எளிமையான முறையில் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து மணமகள் தனது கணவரின் வீட்டுக்கு முறைப்படி சென்றிருக்கிறார்.

திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட பரிசுகளை இளம் தம்பதியர் ஆர்வத்துடன் பிரித்திருக்கின்றனர். அப்போது, ஹோம் தியேட்டர் ஒன்றும் பரிசாக வந்ததை கண்டு ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அதனை வீட்டில் பொருத்தி இருக்கிறார் புதுமாப்பிள்ளை ஹேமந்திர மெராவி. ஸ்விட்சை போட்டவுடன் பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த விபத்தினால் வீட்டின் மேற்க்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதில் மணமகன் ஹேமந்திர மெராவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். அவருடன் வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மணமகளின் முன்னாள் காதலான சர்ஜு என்பவர் ஹோம் தியேட்டரை பரிசாக அளித்தது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து  காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மணமகள் மீதிருந்த கோபம் காரணமாக வெடிபொருள் நிரப்பிய ஹோம் தியேட்டரை பரிசாக அளித்ததாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MARRIAGE #GIFT #HOME THEATER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man gifted explosive home theater to Ex lover on Marriage | India News.