களத்துல இறங்குன உடனே ரசிகர்கள் எழுப்பிய கோஷம்.. கிங் கோலி-ன்னு சும்மாவா சொல்றாங்க.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் நிலையில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
விராட் கோலி
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் விராட் கோலி. பல இக்கட்டான சேஸிங்கிலும் கில்லியாக விளையாடி வெற்றியை எதிரணியினரிடத்தில் இருந்து பெற்றுக்கொடுப்பதில் மாபெரும் ஜீனியஸ். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி பல வருடம் நீடித்து வந்தார். கடந்த ஆண்டு தனது கேப்டன்சி பதவியை துறந்தார் கோலி. இருப்பினும் தொடர்ந்து தான் பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்திருந்தார்.
சமீப ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் துவங்கி வரிசையாக உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிகளில் அதிரடி காட்டினார் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியிலும் விராட் கோலி மிகவும் குறைவான ரன்களையே எடுத்திருந்தார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துவந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார் கோலி.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரிலும் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் தொடரும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் தொடரை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கோலி. பெங்களூரு அணியுடன் இணைத்த கோலி, மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில் அங்கு இருந்த ரசிகர்கள் கோலி ..கோலி என கோஷமிட்டு ஆராவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Virat Kohli at the Chinnaswamy Stadium ahead of the RCB Unbox Event. pic.twitter.com/PtdkcWnlws
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 26, 2023

மற்ற செய்திகள்
