"உங்களுக்கு லாட்டரியில் ரூ. 44 கோடி விழுந்திருக்கு".. இளைஞருக்கு வந்த போன்கால்.. பிராங்க்-னு நம்பரை பிளாக் செஞ்ச அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 05, 2023 05:12 PM

இந்திய இளைஞர் ஒருவருக்கு அபுதாபி பிக் டிக்கெட்டில் 44 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

Bengaluru man won 44 Crore rupees from Abudhabi Big Ticket

Images are subject to © copyright to their respective owners.

உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று தான் பெங்களூருவை சேர்ந்த அருண் குமார் வடக்கே கோரோத் எனும் இளைஞருக்கும் நடந்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் அபுதாபி பிக் டிக்கெட். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட அருண் குமார் கடந்த மார்ச் 22 ஆம் தேதி 261031 எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த டிக்கெட்டிற்கு 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசாக கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து அவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் போன் செய்திருக்கிறார். ஆனால், போனை கட் செய்த அருண் குமார் அந்த நம்பரை பிளாக் செய்திருக்கிறார். அதன்பிறகு மற்றொரு எண்ணில் இருந்து போன் செய்து போன் வந்திருக்கிறது அவருக்கு. அப்போதுதான் தனக்கு ஜாக்பாட் விழுந்திருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,"பிக் டிக்கெட்டில் இருந்து எனக்கு போன் வந்தபோது யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். அழைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தேன். சிறிது நேரம் கழித்து, எனக்கு வேறு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் எனக்கு 20 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய்) கிடைத்திருப்பது தெரியவந்தது. இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற ஆப்ஷன் மூலம் இந்த டிக்கெட்டை வாங்கினேன். அந்த மூன்றாவது டிக்கெட்டிற்கு தான் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இன்னும் என்னால் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியவில்லை" என்றார்.

கிடைத்த பணத்தை கொண்டு சொந்தமாக தொழில் துவங்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல இரண்டாவது பரிசான 22 லட்ச ரூபாயை பஹ்ரைனில் வசித்துவரும் இந்தியரான சுரேஷ் மதான் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengaluru man won 44 Crore rupees from Abudhabi Big Ticket | World News.