“ஹேய்ஸா... ருத்ரஸா”.. கிரிக்கெட் வீரரின் சொல்படி கேட்டு சுழலும் வாள்!.. “அவர போல சுத்துறனா?” - வார்னரின் சேட்டை! வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 12, 2020 10:40 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்தர ஜடேஜா, தனது பாரம்பரிய கொண்டாட்ட முறையான வாள் சுற்றுவதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு அசத்தியுள்ளார்.

ravindra jadeja sword video and david warner imitating video

அந்த வீடியோவின் கேப்ஷனில்  “வாளின் தன் பளபளப்பை இழக்கலாம், ஆனால் அதன் மாஸ்டருக்கு பணியாமல் இராது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ

ட்விட்டரில் வலம்வருகிறது. முன்னதாக சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், “கடந்த ஆண்டில் இந்த நேரத்தில், சன்ரைசர்ஸ் விளம்பரத்துக்காக நடித்துக்கொண்டிருந்தபோது ஜடேஜா கத்தி சுற்றுவது போல  நான் பேட்டினை சுற்றுகிறேனா?” என்று கேட்டு 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.