"பேசாம நான் போயிடவா?" 😂.. புஜாரா பவுலிங் பார்த்து அஸ்வின் போட்ட கமெண்ட்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான் அல்டிமேட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்து வந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர், சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மிகச் சிறப்பாக ஆடி இருந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் குவித்திருந்த நிலையில், தொடர்ந்து ஆடி இருந்து இந்திய அணி 571 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தது.
டிராவில் முடிந்த கடைசி போட்டி..
அதிலும் இந்திய வீரர் விராட் கோலி, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல், முதல் இன்னிங்ஸ் முடிவடையவே நான்கு நாட்களான சூழலில் ஐந்தாவது நாள் வரை நடந்த இந்த போட்டி கடைசியில் டிராவாகவும் முடிந்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
தொடரை வென்ற இந்திய அணி..
இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் எந்த அணிகளுடனும் டெஸ்ட் தொடரில் தோற்கவில்லை என்ற பெருமையுடன் வெற்றி நடை போட்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அது மட்டுமில்லாமல், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அஸ்வினின் ஜாலி ட்வீட்..
இதற்கிடையில், ஐந்தாவது நாளில் போட்டி டிராவாகும் தருணத்தில் இருந்ததால் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையும் பந்து வீச வைத்திருந்தார். இதனிடையே இந்த போட்டியில் புஜாரா பந்து வீசியது தொடர்பான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், "நான் இனிமேல் என்ன செய்யட்டும்?. என்னுடைய வேலையை விட்டுவிடட்டுமா?" என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
புஜாராவின் ஜாலி பதில்ஸ்..
ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவை கவனித்த புஜாரா, "இல்லை. இது நாக்பூரில் முதல் விக்கெட் விழுந்ததும் நீங்கள் பேட்டிங் செய்ய சென்றதற்கு நன்றி தெரிவிப்பதற்கானது" என கலகலப்பாகவும் புஜாரா பதில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் சில கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த தொடரின் முதல் போட்டி, நாக்பூரில் நடைபெற்ற சமயத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 177 ரன்களுக்கு அவுட்டாக, தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவடையும் சமயத்தில் இருந்ததால் புஜாராவுக்கு பதிலாக, நைட் வாட்ச்மேனாக அஸ்வினை களமிறக்கி இருந்தது. அதனைக் குறிப்பிட்டு தான் தற்போது புஜாரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.