"ஒரே ஒரு போட்டி தான்.. CRUSH ஆகவே மாற்றிய ரசிகர்கள்".. இணையத்தை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 06, 2023 11:38 AM

உலக அளவில் மிகவும் பிரபலமான டி 20 லீக் தொடர்களில் ஒன்று ஐபிஎல். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சூழலில், உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

Ameila Kerr Mumbai Indians WPL trending on social media

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மெஸ்ஸி தான் பெஸ்ட்"... கூச்சலிட்ட சிறுவன்.. ரொனால்டோ கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ..!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வீரர்கள் மொத்தமாக கலந்து கொண்டு ஐபிஎல் தொடர்கள் ஆடுவதால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பு நிறைந்த படி இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை புதிதாக உதயமாகி இருந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.

இந்த ஆண்டுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

Ameila Kerr Mumbai Indians WPL trending on social media

Images are subject to © copyright to their respective owners.

மகளிர் பிரீமியர் லீக் தொடர்

இதனிடையே முதல் முறையாக மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரும் ஆரம்பமாகி உள்ளது. இதில் ஐபிஎல் அணிகள், மகளிர் அணியையும் நிர்வகித்து வரும் சூழலில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகள் ரசிகர் மத்தியில் அதிகம் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி இருந்தது. மொத்தமாக ஐந்து அணிகள் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ள சூழலில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஆடவர்களுக்கான தொடர் போல பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகி உள்ளது, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Ameila Kerr Mumbai Indians WPL trending on social media

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வீராங்கனை தற்போது அதிகம் வைரலாகி வரும் பின்னணி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

அமீலா கெர்

நியூசிலாந்து அணியை சேர்ந்தவர் இளம் வீராங்கனை அமீலா கெர். இவர் தற்போது நடைபெற்று வரும் மகளிர் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இடம் பெற்றுள்ளார். குஜராத் ஜெயிண்ட்ஸ்  அணிக்கு எதிரான முதல்  போட்டியில் பேட்டிங் செய்திருந்த அவர் 24 பந்துகளில் 6 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். தொடர்ந்து பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அமீலா, இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

Ameila Kerr Mumbai Indians WPL trending on social media

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் இந்த போட்டிக்கு இடையே அமீலா பேட்டி கொடுத்த சமயத்தில் அவர் மிகவும் கியூட்டாக இருந்ததாக அவரது புகைப்படங்களை ரசிகர்கள் வைரல் ஆக்கவும் தொடங்கி விட்டனர். அது மட்டுமில்லாமல் பலரும் தங்களுடைய Crush லிஸ்டிலும் அமீலா கெரை சேர்த்துள்ள சூழலில், தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதும் அமீலா கெர் தான் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார்.

Also Read | அன்பு மனைவியை ஃபோட்டோ எடுக்க கணவர் எடுத்த முயற்சி.. மனதை கொள்ளை கொண்ட வீடியோ!!

Tags : #CRICKET #AMEILA KERR #MUMBAI INDIANS #MUMBAI INDIANS WPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ameila Kerr Mumbai Indians WPL trending on social media | Sports News.