"ஐபிஎல் தொடரில் ஆடுவேன்".. பென் ஸ்டோக்ஸ் சொன்ன முக்கிய தகவல்.. கூடவே கோச் கொடுத்த அப்டேட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக அளவில் நடைபெறும் மிகச் சிறந்த டி 20 லீக் தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடர், மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான அட்டவணையும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது. முன்னதாக இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்த சூழலில் இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் தங்கள் பேவரைட் அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் பல ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகள் ஆட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே, சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள பிரபல வீரர் ஐபிஎல் தொடர் ஆடுவது பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளது அந்த அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் சூழலில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற ஒரு கேள்வியும் உருவானது ரசிகர் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் சமீப காலமாகத்தான் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். அதுவும் டெஸ்ட் போட்டி கேப்டனாக இருந்து வரும் ஸ்டோக்ஸின் உடல்நிலை குறித்த காரணத்தினால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்காமல் விலகலாம் என்றும் கருத்துக்கள் பரவி வந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் முடிந்த அடுத்த மாதமே வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படும் சூழலில், ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டால் ஆஷஸ் தொடரில் அவர் ஆடுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன் என்பதை பென் ஸ்டோக்ஸ் உறுதி செய்திருந்தார்.
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங்கிடம் இது பற்றி பேசியதாகவும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் பயிற்சியாளராக இருக்கும் பிரண்டன் மெக்குல்லம் சிஎஸ்கே அணிக்காக பென் ஸ்டோக்ஸ் ஆடுவதை பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்படி, சிஎஸ்கே அணி வீரர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பென் ஸ்டோக்ஸையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் ஐபிஎல் தொடர் முடித்த பின்னர் ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் மெக்குல்லம். அதே போல, தற்போது கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், அந்த பொறுப்பில்லாமல் சென்னை அணிக்கு ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ஒரு சில ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த பென் ஸ்டோக்ஸ், தனது உடல் நிலையை பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒரு விஷயமாகவும் உள்ளது.

மற்ற செய்திகள்
