"நல்லவேளை அந்த பிச்-ல KL ராகுல் விளையாடல'.. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பரபரப்பு பேச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போதைய துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் குறித்து பேசியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | நாய் என நினைத்து அரியவகை கரடியை வீட்டில் வளர்த்து வந்த சீன குடும்பம்..!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
சுழற்பந்து வீச்சு
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய வீரர்களை மிரள செய்திருந்தது. குறிப்பாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி விக்கெட்களை குவித்து வந்தது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி பேட்ஸ்மேன்களை திணற வைத்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியன் மற்றும் குஹ்னமென் சூழல் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் கேஎல் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த்.
Images are subject to © copyright to their respective owners.
கேஎல் ராகுல்
முதல் இரண்டு போட்டிகளிலும் கேஎல் ராகுல் விளையாடிய நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீகாந்த்,"விளையாடுவதற்கு பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளம் கடினமாகவே இருந்திருக்கிறது. ஒருவேளை ராகுல் இந்த பிட்சில் விளையாடி இருந்தால் அவரை நிச்சயம் குறை சொல்லி இருப்பார்கள். முதலில் கேஎல் ராகுலுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிர்ஷ்டவசமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடாமல் போனது நல்லதாகவே அமைந்தது. ஒருவேளை அவர் இப்படியான மோசமான விக்கெட்டுகளில் விளையாடியிருந்தால் அவருடைய கிரிக்கெட் எதிர்காலமே முடிந்து போயிருக்கும். வெளிப்படையாக சொன்னால் கடவுளுக்கு நன்றி. அவர் விளையாடவில்லை" என தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்தூர் மைதானம் பற்றி பேசிய அவர் இங்கே பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிப்பது கடினம் என்றும் விராட் கோலியாகவே இருந்தாலும் இது போன்ற பிட்ச்களில் ரன் குவிப்பில் ஈடுபடுவது மிகுந்த சிரமம் எனவும் தெரிவித்திருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருந்த இந்த பிட்ச் பேட்ஸ்மன்களுக்கு மிகுந்த சவாலை அளித்ததாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார். கிரிக்கெட்டில் சில சமயங்கள் இதுபோன்ற கடினமான பேச்சுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.