ஸ்டார்க் கையில் உருவான காயம்?... கிரிக்கெட் போட்டிக்கு நடுவே பரபரப்பு!!.. ஆனாலும் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "தலைவர் மறைந்த போது அந்த வேதனையை விட"... வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. எமோஷனல் ஆன முதல்வர் MK Stalin!!
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி, 109 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. தொடர்ந்து ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.
அதிலும் கடைசி 11 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மேலும் ஆஸ்திரேலியா அணி 197 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆடி வருகிறது. முன்னதாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் முன்னேறி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே வேளையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கவும் தடுமாறி வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கையில் ரத்தம் வழிந்தது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசிக் கொண்டிருந்த போது அவரது விரலில் இருந்து ரத்தம் வந்ததாகவும் தெரிகிறது. ஆனால், ரத்தம் வந்ததை பொருட்படுத்தாமல் அதனை துடைத்து விட்டு ஸ்டார்க் தொடர்ந்து பந்து வீசியதாகவும் கூறப்படுகிறது. ரத்தம் வழிந்த போதும் பந்து வீசிய ஸ்டார்க்கின் வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
— Nitin Kumar (@NitinKu29561598) March 2, 2023

மற்ற செய்திகள்
