மேலே உயர்ந்த பந்து.. வேகமா ஓடி வந்த வீராங்கனை.. சட்டுன்னு நடந்த மேஜிக்.. மெய்சிலிரித்து பார்த்த ரசிகர்கள்!!.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 10, 2023 03:19 PM

இந்தியாவில் ஐபிஎல் டி 20 லீக் போட்டிகள், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

WPL Jemimah Rodrigues brilliant catch against mumbai indians

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு.. சோகத்தில் ரசிகர்கள்.. கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய வீரர்கள்!!

ஐபிஎல் போட்டிகளை போல, உலகின் பல நாடுகளிலும் டி 20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆடவர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, இந்தாண்டு மகளிருக்கான WPL தொடரும் ஆரம்பமாகி உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், UP வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 5 அணிகள் இடம்பெற்றுளளது.

WPL Jemimah Rodrigues brilliant catch against mumbai indians

Images are subject to © copyright to their respective owners.

ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ்

இதுவரை 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ள சூழலில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது. தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்திலும் உள்ளது.

இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த WPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, மும்பை அணி வீராங்கனைகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.

WPL Jemimah Rodrigues brilliant catch against mumbai indians

Images are subject to © copyright to their respective owners.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த கேட்ச்

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, 15 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த கேட்ச் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஹெலி மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அலைஸ் கேப்ஸி ஓவரில் அடித்த பந்து நேராக மேலே எழும்ப டெல்லி அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேகமாக ஓடி வந்து அந்தரத்தில் பறந்த படி, அற்புதமாக தாவி கேட்ச் ஆக மாற்றி இருந்தார்.

WPL Jemimah Rodrigues brilliant catch against mumbai indians

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் சூழலில், பலரும் ஜெமின் ரோட்ரிக்ஸின் அபார ஃபீல்டிங் திறனை பாராட்டியும் வருகின்றனர்.

Also Read | ஒரு மாசத்துக்கு முன் காணாம போன விமானத்தின் நொறுங்கிய பாகங்களுடன் கிடைத்த மனித உடல்கள்!!.. அதிர்ச்சி பின்னணி!!

Tags : #CRICKET #WPL #WPL JEMIMAH RODRIGUES #MUMBAI INDIANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. WPL Jemimah Rodrigues brilliant catch against mumbai indians | Sports News.