'எதுக்கு இவ்ளோ பெரிய ஷாக்?'.. BEHINDWOODS டிஜிட்டல் விருது விழாவில் வைரல் ஆகும் ரித்திகா ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுவருகிறது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் நிகழ்வு.

இதன் இன்னொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Icons Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கலக்கியவர் சீரியல் நடிகை ரித்திகா. அதிலும் குறிப்பாக அனைவரையும் கவுண்ட்டர் போட்டு கலாய்த்த பாலாவையே ஓட விடும் அளவுக்கு கவுண்ட்டர் போட்டு தெறிக்கவிட்டவர் ரித்திகா. இந்நிலையில் Behindwoods Gold டெலிவிஷன் மற்றும் டிஜிட்டல் விருதுகள் வழங்கும் விழாவுக்கு வருகை தந்துள்ளார் ரித்திகா.
இந்த நிகழ்வில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த எக்ஸ்ப்ரஷனை முகத்தில் வெளிப்படுத்தியிருக்கும் ரித்திகாவின் புகைப்படங்கள் Behindwoods இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘எதுக்கு இவ்ளோ பெரிய ஷாக்?’ என கேள்வி கேட்டு வருகின்றனர்.
