'ஐபிஎல்'ல மாஸ் பண்ணி... சர்வதேச அணிக்காக தேர்வான 'வீரர்'... கடைசி தருணத்தில் வந்த 'சிக்கல்'??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு பின்னர் இரு அணிகளுக்கும் இடையே 5 டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வருண் சக்ரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோருக்கு டி 20 சர்வதேச அணியில் இடம் கிடைத்திருந்தது.
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆல் ரவுண்டர் ராகுல் டெவாட்டியா, தற்போது டி 20 தொடரில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய அணியில் ஆட வேண்டும் என்றால் ஃபிட்னஸ் தேர்வில் நிச்சயம் வீரர் ஒருவர் தேர்ச்சி பெற வேண்டும்.
அதாவது, யோ யோ டெஸ்டில் 17.1 சதவீதம் அல்லது 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.3 நிமிடத்திற்குள் வீரர் ஒருவர் ஓடி முடிக்க வேண்டும். இதில், வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். ஆனால், இவை இரண்டிலும் ராகுல் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், தற்போது ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பாக, இதே போல தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் இந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும், ராகுலுக்கும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.