VIDEO : என்ன வார்த்த பேசிட்டீங்க 'தினேஷ் கார்த்திக்'??... மைக்கில் கேட்ட 'அந்த' கேட்கக்கூடாத தமிழ் வார்த்தை... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு ஆடிய மும்பை அணி, 17 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், மும்பை அணி பேட்டிங் செய்த போது, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 14 வது ஓவரை வீசினார். அந்த பந்தை டி காக் எதிர்கொண்ட நிலையில், கீப்பர் நின்ற தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி பந்து குறித்து தகாத வார்த்தைகள் மூலம் தமிழில் குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
What is this @DineshKarthik ?
Whats your take @ashwinravi99 😂... Is that a part of the game ?#MIvsKKR #KKRHaiTaiyaar #MumbaiIndians #DineshKarthik pic.twitter.com/AzVzl1FGx4
— Sushil (@_Vettaiyan_) October 16, 2020
முன்னதாக, வருண் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தமிழக வீரர்கள் என்பதால் போட்டிக்கு நடுவே அடிக்கடி தமிழில் உரையாடுவது வழக்கம். தோனி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் பேட்டிங் செய்த போது, வருணுடன் தமிழிலேயே தினேஷ் கார்த்திக் உரையாடிய வீடியோக்கள் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
