VIDEO : 'துபாய்' மைதானங்களில் கேட்ட 'தமிழ்' சத்தம்... 'சும்மா' வேற லெவலில் கெத்து காட்டிய 'தமிழக' வீரர்கள்... அசத்தல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 20, 2020 10:02 PM

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

video of dinesh karthik and varun who speak in tamil gone viral

இந்நிலையில், விக்கெட் கீப்பர் நிற்கும் தினேஷ் கார்த்திக் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி பந்து வீசும் போது, வருணுக்கு தமிழிலேயே அறிவுரைகளை வழங்குகிறார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெவாட்டியா ஆகியோரின் விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி அவுட் செய்ததற்கு பின்னால் தினேஷ் கார்த்திக்கின் டிப்ஸ்கள் முக்கிய பங்காற்றியது.

அவர்கள் மேலும் சில போட்டிகளில் தமிழில் உரையாடிக் கொள்வது தொடர்பான வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக, இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், அப்பதவியில் இருந்து விலகிய நிலையில் கொல்கத்தா அணியை தற்போது இயான் மோர்கன் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video of dinesh karthik and varun who speak in tamil gone viral | Sports News.