"அந்த '3' பேரு மட்டும் எங்க 'டீம்'ல இருந்துருக்கணும்..." புலம்பித் தள்ளிய 'பஞ்சாப்' டீம் 'ஓனர்'... "அட இப்போ ஃபீல் பண்ணி என்ன 'பிரயோஜனம்'??"...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, இந்தமுறை ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு, மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன் மிகப் பெரிய அளவில் ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி 2 லீக் போட்டிகளில் தோல்வி பெற்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா (Ness Wadia), நடந்து முடிந்த ஐபிஎல் குறித்து தற்போது பேசியுள்ளார். 'இந்த முறை புதிய கேப்டன் தலைமையில் பல புதிய வீரர்களுடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. சில நேரம் அது வேலை செய்யும். விரைவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் அணியின் மிடில் ஆர்டர் மற்றும் அணியின் பந்து வீச்சிலுள்ள குறைகளை சரி செய்யும் படி வீரர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். அணியில் இருந்த சர்வதேச வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட்டை வெளிப்படுத்தவில்லை' என்றார்.
மேலும், 'அணியின் கோர் டீம் (ராகுல், மயங்க் அகர்வால், கெயில், பூரன், ஷமி) சிறப்பாக உள்ளது. அதே போன்று இளம் வீரர்களான ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்' என கூறினார்.
இந்த சீசனில் கெயில் முதல் ஏழு போட்டிகளில் களமிறங்காமல் இருந்து வந்த நிலையில், அடுத்த சீசனில் கெயிலை அணியில் தக்க வைக்க வேண்டும் என்றும், அவரை அனைத்து போட்டிகளிலும் களமிறக்குவோம் என்றும் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த சாம் குர்ரன், ஹைதராபாத் அணியில் இருந்த நடராஜன், கொல்கத்தா அணியில் இருந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
ஆனால் இந்த மூன்று பேரும் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். இது பற்றி பேசிய நெஸ் வாடியா, 'அவர்கள் மட்டும் இந்தமுறை பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?' என எண்ணி வேதனைப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
