பிரித்வி ஷா-க்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம்.. லெவல் 1 குற்றத்தில் ஈடுபட்டதாக புகார்.. அப்படின்னா என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read | எட்டே நாளில்.. இறைவன் கொடுத்த GIFT.. சவுதியில் நிகழ்ந்த அதிசயம்..! நெகிழ்ந்து போன பாத்திமா சபரிமாலா..!
ஐபிஎல் 2022
கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய 15 வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ராகுல் 77 ரன்களும், தீபக் ஹூடா 52 ரன்களும் குவித்தனர். டெல்லி அணியின் ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சேசிங்
இதனை தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 7 ரன்னிலும் வார்னர் 3 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதன்பிறகு மார்ஷ் - பண்ட் ஜோடி நிதானமாக ஆடியது. ஆனாலும் இந்த பார்ட்னர்ஷிப் சற்று நேரத்திலேயே முறிந்தது. எட்டாவது ஓவரில் மார்ஷ் 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் ரிஷப் பண்டும் 44 ரன்னில் அவுட்டானார். அடுத்துவந்த பேட்ஸ்மேன்களும் நீடிக்காத காரணத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி. இதன்மூலம் லக்னோ 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிரித்வி ஷா
இந்நிலையில் இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாகவும் அதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 லெவல் 1 இன் கீழ் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதுடன் அனுமதியை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக லெவல் 1 குற்றம் என்பது எதிரணியினர் அல்லது நடுவரிடம் எதிர்ப்பு சைகை காட்டுவது ஆகும். டெல்லி அணியை சேர்ந்த பிரித்வி ஷாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8