4 பந்துகளில் 4 விக்கெட்.. ஜேசன் ஹோல்டர் செய்த 'மெர்சல்' சம்பவம்.. ஐபிஎல் ஏலத்தில் நடக்கப் போகும் அதிசயம்??.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து ஜேசன் ஹோல்டர் அசத்தியதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருந்தது.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி 20 போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அந்த அணியின் கேப்டனின் பொல்லார்ட் 41 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
தொடர்ந்து, 180 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்களும் எடுத்தனர். இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
முதல் ஹாட்ரிக்
முன்னதாக, இந்த போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர், மிகச் சிறப்பாக பந்து வீசி, 4 பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். டி 20 கிரிக்கெட்டில், முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜேசன் ஹோல்டர்.
ஐபிஎல் மெகா ஏலம்
அது மட்டுமில்லாமல், தற்போது ஜேசன் ஹோல்டர் மீது மற்றொரு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் 2 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆல் ரவுண்டர் மற்றும் கேப்டன்
மீதமுள்ள வீரர்களை இந்த ஏலத்தில் தான் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்பதால், ஜேசன் ஹோல்டரின் ஆட்டத்தை அனைத்து அணி நிர்வாகமும் நிச்சயம் கவனித்திருக்கும். இதனால், அவரை வாங்கிக் கொள்ள கடுமையான போட்டி நிலவும் என்றே தெரிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், ஜேசன் ஹோல்டர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மற்றும் கேப்டன் என்பதால் தான்.
பெரிய தொகை
வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான சாம் குர்ரான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளனர். கடந்த ஆண்டு, அதிக தொகைக்கு ஏலம் போன ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இப்படி பல முடிவுகள், ஜேசன் ஹோல்டருக்கு சாதகமாக உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மற்றும் கேப்டன் என பல அம்சமுள்ள வீரருக்கு நிச்சயம் பெரிய தொகை வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலியாகவுள்ள கேப்டன் இடம்
அது மட்டுமில்லாமல், சில ஐபிஎல் அணிளில், கேப்டனுக்கான இடம் காலியாக உள்ளது. அப்படி ஒரு நிலையில் இருக்கும் அணிகள், நிச்சயம் ஜேசன் ஹோல்டரை அணியில் இணைக்க முயற்சி செய்யும். இதனால், அவர் ஐபிஎல் ஏல வரலாற்றில், பெரிய தொகைக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூட, ஜேசன் ஹோல்டரை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்து, கேப்டன் ஆக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ICYMI: Watch Jason Holder's sensational double hat-trick in the #WIvENG 5th T20I
🎥 @FanCode#WIvsENG #JasonHolderpic.twitter.com/RgFL6ANAVr
— CricXtasy (@CricXtasy) January 31, 2022

மற்ற செய்திகள்
