
இடிக்கப்படும் சேப்பாக்கம் மைதானத்தின் கேலரிகள்? மாற்றத்தை சந்திக்கும் சிதம்பரம் ஸ்டேடியம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2022 போட்டித் தொடரின் முதலாவது தொடக்க போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்க உள்ளது என்று தான் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுவும் முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

2022 ஐபிஎல் போட்டித் தொடர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி முதல் சென்னையில் இருந்து தான் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் பிசிசிஐ இதுகுறித்த அறிவிப்புகளை தனது பங்குதாரர்களிடம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
15-வது ஐபிஎல் போட்டித் தொடரில் இந்த முறை மொத்தம் 10 அணிகள் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 74 போட்டிகள் சுமார் 60 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் ஐபிஎல் இறுதிக்கோப்பைக்கான போட்டி நடைபெறும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு அணிக்கும் சுமார் 14 லீக் போட்டிகள் விளையாட வேண்டியது இருக்கும்.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுவதால் நிச்சயமாக ஐபிஎல் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. 2020 மற்றும் 2021 (பாதி) ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் நடைபெற்றன. 2022 போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறும் என நம்பப்படுகிறது.
இதன் காரணமாக தொடக்க விழா நிச்சயம் பிரம்மாண்டமானதாக சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதற்காக பிரம்மாண்ட புதிய தோற்றத்துக்குத் தயாராகி வருகிறது சேப்பாக்கம் மைதானம். சில கேலரிகள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மைதானங்கள் மெருகேற்றப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
