இதனாலதான் CSK கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகினாரா?.. சீக்ரெட்டை உடைத்த தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.
Also Read | ‘ஜாம்பவான்’ சச்சின் சாதனையை சமன் செஞ்ச CSK ப்ளேயர்.. 12 வருசத்துக்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் 85 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளும், மிட்சல் சாண்ட்னர் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இந்த சீசனில் அவர் தான் கேப்டனாக செயல்படப் போகிறார் என கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு தெரியும். முதல் 2 போட்டியில் கேப்டன் பொறுப்பை நான்தான் கவனித்தேன். அதன்பிறகு ஜடேஜாவிடம், நீ தான் முடிவுகளை அணிக்காக எடுக்க வேண்டும் என்று கூறினேன்.
அப்போது, கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன்ஷிப்பின் அழுத்தம் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதித்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார்’ தோனி கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என அவர் மீது அழுத்தம் அதிகமாக இருந்தது. இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜடேஜா சொதப்பி வந்தார். இதன் காரணமாகவே கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகியுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8