‘ஜாம்பவான்’ சச்சின் சாதனையை சமன் செஞ்ச CSK ப்ளேயர்.. 12 வருசத்துக்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சமன் செய்துள்ளார்.
Also Read | எட்டே நாளில்.. இறைவன் கொடுத்த GIFT.. சவுதியில் நிகழ்ந்த அதிசயம்..! நெகிழ்ந்து போன பாத்திமா சபரிமாலா..!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இதில் ருதுராஜ் 99 ரன்களும், டேவன் கான்வே 85 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். கடந்த 2010-ம் நடந்த ஐபிஎல் போட்டியில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.
இதனை அடுத்து 34 இன்னிங்ஸில சுரேஷ் ரெய்னா 1000 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் தேவ்தத் படிக்கல் 35 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்துள்ளார். இந்த சூழலில் நேற்றைய ஆட்டத்தில் 6-வது ஓவரை வீசிய யான்செனின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர் அடித்தன் மூலம், ஐபிஎல் போட்டியில் 1000 ரன்களைக் கடந்தார். இதனால் 12 வருடங்களுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8