"எங்கள சில பேர் துரத்துனாங்க.." கோலி எடுத்த ரிஸ்க்.. நண்பர் பகிர்ந்த ரகசியம்.. "இதுக்காகவா இவ்ளோ பெரிய அக்கப்போரு"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சமீபத்தில் தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியை ஆடியிருந்தார்.
இவரது இந்த சாதனைக்கு, முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
மொஹாலியில் வைத்து நடைபெற்றிருந்த டெஸ்ட் போட்டியில், பார்வையாளர்கள் மத்தியில் கோலிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டியில் சதமடிக்காமல் இருந்து வரும் கோலி, நூறாவது டெஸ்ட் போட்டியில் சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 45 ரன்களில் ஆட்டமிழந்து அவர் ஏமாற்றம் அளித்திருந்தார். பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில், நிச்சயம் அவர் சதமடித்து அசத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
'ஸ்ட்ரீட் ஃபுட்' விரும்பி
இந்நிலையில், U 19 போட்டிகளில், கோலியுடன் இணைந்து ஆடியுள்ள அவரின் நண்பர் பிரதீப் சாங்வான், கோலி குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். "ஜூனியர் கிரிக்கெட் ஆடிய சமயத்தில், சுமார் 7 முதல் 8 ஆண்டுகள், கோலி என்னுடைய ரூம் பார்ட்னர் தான். அவருக்கு ஸ்ட்ரீட் ஃபுட் என்றால் மிகவும் இஷ்டம். சிக்கன் மற்றும் கோர்மா ரோல் போன்றவை விராட் கோலியின் ஃபேவரைட்.
அடிதடி நடக்கும்
ஒரு முறை இந்திய U 19 அணி, கிரிக்கெட் போட்டிகள் ஆட தென்னாப்பிரிக்காவிற்கு சென்றிருந்தது. அப்போது, கோலியிடம் ஒருவர், குறிப்பிட்ட இடத்தில் சிறந்த மட்டன் ரோல் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், அது பாதுகாப்பான இடம் கிடையாது. அங்குள்ள உணவு சிறப்பாக இருக்கும் என்றும், ஆனால் அந்த பகுதியில் அடிக்கடி அடிதடி நடக்கும் என்றும் சிலர் தெரிவித்தனர்.
கோலி எடுத்த 'ரிஸ்க்'
இதனைக் கேட்டதும் நான் பயந்தேன். ஆனால், கோலியோ 'ஒன்றும் ஆகாது, அங்கே செல்லலாம்' எனக்கூறி தைரியமாக இருந்தார். அந்த பகுதிக்கு சென்று, நாங்கள் ஸ்ட்ரீட் புட் சாப்பிட்டோம். அப்போது, சிலர் எங்களை பின் தொடர்ந்தார்கள். உடனடியாக காரில் ஏறி, எங்களது இடம் வந்த பிறகு தான் வண்டியை நிறுத்தினோம்" என உணவு பிரியராக இருந்த கோலி, அதற்கு வேண்டி எப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்தார் என பிரதீப் கூறினார்.
ஸ்ட்ரிக்ட் டயட்
தொடர்ந்து பேசிய பிரதீப், "ஆனால் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஸ்ட்ரிக்ட் டயட்டை கோலி பின்பற்றினார். உடல் எடையில் அதிக கவனம் மேற்கொண்டு, அதை குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டார். சிறந்த பீல்டராக வேண்டும் என்றும் விரும்பினார். அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடவும் அவர் விரும்பினார்" என பிரதீப் சாங்வான் கோலி குறித்து சில ரகசியங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் ஸ்ட்ரீட் ஃபுட் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்த கோலி, இன்று தீவிரமாக டயட் மேற்கொண்டு, தன்னுடைய பிட்னெஸ் லெவலை சரியாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
'பலூன்' விற்ற இளம் பெண்.. ஒரே ஒரு ஃபோட்டோவால் ஓஹோவென மாறிய வாழ்க்கை... சிலிர்க்க வைக்கும் பின்னணி