குழப்பத்தில் இருந்த ரோஹித்.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வாய்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தற்போது 3 போட்டிகள் டி20 தொடரில் அந்த அணி பங்கேற்றுள்ளது. இதன்படி, இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட பெண்..பின்னணி என்ன?
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் கேப்டன் பூரன் தவிர அனைத்து வீரர்களும் சொதப்பவே 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன்43 பந்தில் 61 ரன்களை குவித்தார்.
ரோஹித்திற்கு வந்த குழப்பம்
நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய ரவி பிஷ்னாய் வீசிய ஓவரின்போது, ரோஸ்டன் சேஸ் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்தார். ரவி வீசிய கூக்ளியை சமாளிக்க சேஸ் முயன்றார். லெக் டவுனாக சென்ற அந்தப் பந்தைப் பிடித்து உடனே பண்ட் ஸ்டம்பிங்கும் செய்தார். இதற்கிடையே ரவி எல்பிடபிள்யூ-க்கு அப்பீல் செய்தார்.
பேட்ஸ்மேனை பந்து கடக்கும்போது சத்தம் வந்ததால், கேட்சா, எல்பிடபிள்யூவா என வீரர்கள் சந்தேகத்தில் இருந்த வேளையில் அம்பயர் ஜெயராமன் மதனகோபால் வைட் என சைகை காட்ட கேப்டன் ரோஹித்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அப்போது அருகே நின்றிருந்த கோலி “Main bol raha hu, tu review le" (நான் சொல்கிறேன்.. ரிவ்யூ எடுக்கலாம்) என ரோஹித்திடம் சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருக்கிறது. இதனையடுத்து ரோஹித்தும் ரிவ்யூ கேட்டார்.
நாட் அவுட்
அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டை கடக்கும் போது, பிளாட் லைன் இருப்பது தெரியவந்தது. ஆனால், பந்து பேடில் பட்டதை நடுவர்கள் கண்டனர். மேலும், ஸ்டம்பிங் குறித்த செக்கிங்கும் நடைபெற்றது. மூன்றிலும் தப்பித்த சேஸ் , தொடர்ந்து பேட்டிங் செய்தார். பந்து பேடில் பட்டதால் வைட் கொடுத்ததை திரும்பப்பெற்றார் அம்பயர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஷர்மா ப்ரூக்ஸ் பேட்டிங் செய்யும்போது ரோஹித்தை ரிவ்யூ எடுக்க கோலி வலியுறுத்தினார். இதனையடுத்து எடுக்கப்பட்ட ரிவ்யூவில் ப்ரூக்ஸ்-க்கு அவுட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அறிமுக போட்டியில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய், 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனை அடுத்து ரவிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்ததும் செம்ம அறிவிப்பு காத்திருக்கு.. முதல்வர் ஸ்டாலினே சொன்ன விஷயம்!
— Maqbool (@im_maqbool) February 16, 2022
— Maqbool (@im_maqbool) February 16, 2022