மூனே நாளில் மேட்ச்சை முடித்த இந்தியா! பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கிய ஜட்டு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இவங்க 'பெண்கள் கிரிக்கெட்டின்' சச்சின்பா .. மிதாலி ராஜ் படைத்த ரெக்கார்டு பிரேக்கிங் சாதனை
ஜடேஜாவின் கேரியர் பெஸ்ட் இன்னிங்ஸ்:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் டி 20 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளையும் இழந்து வொயிட்வாஷ் ஆனது. இதையடுத்து மார்ச் 4 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ரிஷப் பண்ட்டின் 96, ரவிந்தர ஜடேஜாவின் அபாரமான 175*(கேரியர் பெஸ்ட் ஸ்கோர்) ஆகிய சிறப்பான இன்னிங்ஸ்களால் 8 விக்கெட்களை இழந்து 574 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இலங்கை பவுலர்கள் ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டியை பார்ப்பது போல இருந்தது இந்தியாவின் பேட்டிங். இலங்கை தரப்பில் லக்மல், பெர்னாண்டோ, எம்புல்டென்யா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பவுலிங்கிலும் கலக்கிய ஜட்டு:
பவுலிங்கில் சோபிக்காத இலங்கை அணி பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. இரண்டாம் நாள் இறுதி செஷனில் களமிறங்கி அந்த நாளின் முடிவுக்குள்ளாகவே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில் சீட்டுக் கட்டு சரிவது போல இலங்கை வீரர்கள் தங்கள் விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே சேர்த்து பாலோ ஆன் ஆனது. இந்தியா தரப்பில் பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பவுலிங்கிலும் 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு அடுத்து அஷ்வின், ஷமி தலா 2 விக்கெட்களும் பூம்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இலங்கை:
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, முதல் இன்னிங்ஸ் போலவே பரிதாபமாக விளையாடியது. அந்த அணியின் டிக்வெல்லா மட்டுமே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்த ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் எடுத்துக் கலக்கினார். ரவி அஸ்வின் இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கெட் கைப்பற்றி இரண்டாம் இன்னிங்ஸை பாதி நாளில் முடித்தனர். இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த போட்டியில் நடந்த சாதனைகள்:
3 நாட்கள் மட்டுமே நடந்த இந்த போட்டியில் 3 வீரர்கள் முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். முன்னாள் கேப்டன் கோலி தனது 100 ஆவது டெஸ்ட் போட்டி என்ற மைல் கல்லை எட்டினார். அதுபோல முதல் இன்னிங்ஸில் 7 ஆவது இடத்தில் களமிறங்கிய ஜடேஜா 175 ரன்கள் சேர்த்து கபில்தேவ்வின் முந்தைய சாதனையான 169 சாதனையை முறியடித்தார். அஸ்வின் இந்த போட்டியில் கபில்தேவ்வின் 434 விக்கெட்கள் சாதனையைக் கடந்து அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
புதுச்சேரி கடல் சீற்றம்… நள்ளிரவில் இடிந்து விழுந்தது பழமையான துறைமுகப் பாலம்! பரபரப்பு சம்பவம்