ஜஸ்ட் மிஸ்… 100 ஆவது டெஸ்ட் சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜாம்பவான் வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

Ind vs SL :10 ஆண்டுகளில் புஜாரா, ரஹானே இல்லாத முதல் டெஸ்ட்… அவர்களின் இடத்தில் யார்?
டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் 100 போட்டிகள் விளையாடுவது சாதாரண காரியம் இல்லை. அதற்கு அசாத்தியமான உடல்தகுதியில் டெஸ்ட் போட்டியின் மீது தீராக்காதலும் வேண்டும். உலக கிரிகெட்டில் இதுவரை இந்த மைல்கல்லை எட்டியவர்கள் வெகுசிலரே. டி 20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில் 100 டெஸ்ட் போட்டிகள் என்பது ஒரு வீரருக்கு வாழ்நாள் கனவுகளில் ஒன்றுதான். இந்நிலையில் இன்று அந்த சாதனையை தன்னுடைய 33 ஆவது வயதில் கடந்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னர் சர்வதேசக் கிரிக்கெட்டில் 70 வீரர்கள் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
இதுபற்றி இன்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சில ஜாம்பவான் வீரர்கள் 90 போட்டிகளுக்கு மேல் விளையாடி ஆனால் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஓய்வு பெற்றுள்ளனர் என்பதை வெகுசிலரே அறிவர். அப்படி சாதனையை நூலிழையில் தவறவிட்ட சில ஜாம்பவான் கிரிக்கெட் வீர்ரகளைப் பற்றி பார்க்கலாம்.
ஒரு போட்டியில் தவறவிட்ட முகமது அசாருதீன்
இந்திய அணிக்கு 3 உலகக்கோப்பைகளில் தலைமை தாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் அசாருதீன். அதுபோல நீண்ட காலம் இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டவர்களில் ஒருவர். அசாருதீன் 1984 முதல் 2000 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடியவர். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 100 ஆவது போட்டியில் விளையாடும் முன்னர் ஓய்வு பெற்று நூலிழையில் அந்த சாதனையை தவறவிட்டுள்ளார்.
90 போட்டிகளுக்கு மேல் விளையாடியவ ஜாம்பவான்கள்:
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான கில்கிறிஸ்ட் 96 போட்டிகளோடு ஓய்வு பெற்றுள்ளார். அது போல பேட்ஸ்மேன்களை தன் வேகப்பந்து வீச்சால் அலற விட்ட, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ் 98 போட்டிகள் விளையாடியுள்ளார். இன்னும் 2 போடிகள் விளையாடி இருந்தால் அவரும் 100 டெஸ்ட் போட்டி பட்டியலில் இணைந்திருப்பார்.
இதுபோல கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கேரி சோபர்ஸ், இலங்கையின் ரணதுங்கா, இந்தியாவின் ஜாகீர்கான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட 20 வீரர்கள் 90 போட்டிகளுக்கு மேல் விளையாடி 100 ஆவது டெஸ்ட்டில் விளையாட முடியாமல் ஓய்வுபெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்
