100-வது டெஸ்ட்டுக்கு அப்பறம் விராட் கோலி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு100 வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில் கலந்துகொண்டதன் மூலம் 100-வது டெஸ்டில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் இது என்பதால் முன்னதாகவே சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
கோல்டன் கேப்
100வது டெஸ்டில் விளையாட காத்திருந்த கோலிக்கு மைதானத்தில் கோல்டன் கேப்-ஐ நினைவுப் பரிசாக வழங்கி கவுரவப்படுத்தினார் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
கோலியை பாராட்டி பேசிய டிராவிட்," கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கான சான்றாக 100-வது டெஸ்ட் போட்டி என்னும் மைல்கல்லை நீங்கள் எட்டியுள்ளீர்கள். வியர்வை, ஒழுக்கம், தைரியம், திறமை, உறுதி, ஆசை மற்றும் கவனம் என அனைத்தும் உங்களிடம் இருந்ததால் தான் உங்களது இந்த டெஸ்ட் பயணம் மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது. இந்த பயணத்திற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம்" என்றார்.
பின்னர், மைதானத்திற்குள் கோலி நுழைந்த போது அவரை கவுரவப்படுத்தும் வகையில் வீரர்கள் ஸ்டாண்ட்டிங் ஓவேஷன் கொடுத்தனர். இதனை கோலி புன்னகை கலந்த வெக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்.
நன்றி
இந்நிலையில், நேற்றைய டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் விராட் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த டிவிட்டர் பதிவில்," இதை அடைய (100-வது டெஸ்ட்) வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் பல மேடு பள்ளங்களை பார்த்துள்ளேன். மேலும், இந்த பயணத்தினை அழகாக மாற்றிய கிரிக்கெட் வாரியம், சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விராட் கோலி வெளியிட்ட இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
Been a long journey to get here. Full of ups and downs and learnings. Would not have had it any other way. Thank you for all your support 🇮🇳🙏🏻 pic.twitter.com/Q5Vdtz8s1K
— Virat Kohli (@imVkohli) March 6, 2022

மற்ற செய்திகள்
