VTK D Logo Top

"ஒரு காலத்துல ஹாஸ்பிடலா இருந்த இடம்".. இப்போ உள்ள போய் பாத்தா.. அல்லு சில்லு சிதற வைக்கும் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 15, 2022 02:12 PM

ஒரு காலத்தில் மருத்துவமனையாக செயல்பட்டு வந்த இடத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரது மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

abandoned hospital inside pics surfaces on online

Also Read | பூமிக்கு அடியில மர்ம சத்தம்.. அச்சத்தில் கிராமம்.. 9,700 பேர் மரணிக்க காரணமா இருந்த இடமா.?

Edinburgh பகுதியில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. முதல் உலக போரின் போது இந்த இடம் கடற்படைக்கான நிலையமாக செயல்பட்டது.

தொடர்ந்து, UK பகுதில் காசநோய் அதிகரித்ததால், அதே இடத்தை சுகாதார நிலையமாக மாற்றி செயல்படுத்தினர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில், காசநோய் ஒரு பாக்டீரியா தொற்றாக இருந்த நிலையில், பலரின் இறப்புக்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அப்போது இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

abandoned hospital inside pics surfaces on online

Image Credits : Mediadrumimages/Grant Vincent)

கடந்த 1997 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை முற்றிலுமாக மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த மருத்துவமனை இருக்கும் நிலை தான், பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது. பாழடைந்த அறைகள், இன்னும் நோயாளிகளின் விளைவுகளுடன் தான் காணப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் வண்டிகள் சிதைப்பட்டு கிடக்கும் நிலையில், அவர்கள் பயன்படுத்திய பொம்மைகள் ஜன்னலில் கட்டி வைக்கப்பட்டுள்ளது கூட அப்படியே இருக்கிறது.

abandoned hospital inside pics surfaces on online

Image Credits : Mediadrumimages/Grant Vincent)

ஏராளமான சுவர்கள் மற்றும் தரைகள் இடங்கள் இடிந்து போய் கிடக்கிறது. நோயாளிகள் பயன்படுத்திய மெத்தைகள் கூட குவியலாக பல இடங்களில் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த இடத்திற்கு சமீபத்தில் சென்ற சில நபர்கள், அதனை சுற்றி பார்த்து விட்டு மிகவும் அமானுஷ்யமாக இருந்ததாக கூறி உள்ளனர்.

abandoned hospital inside pics surfaces on online

Image Credits : Mediadrumimages/Grant Vincent)

அது மட்டுமில்லாமல், படுக்கைகளுடன் கிடந்த சில அறைகளில் அவர்கள் நுழைந்த போது, ஒரு வித ஆற்றலையே உணர முடிந்ததாகவும் கூறி உள்ளனர். ஒரு காலத்தில் காசநோய் நோயாளிகள் இருந்த மருத்துவமனை, சிதைந்து போன பொருட்களுடன் வினோதமாக இருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "சோழ சாம்ராஜ்யம் பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்" - PS1 பாக்க போறாரா ஆனந்த் மஹிந்திரா..? பரபரப்பு ட்வீட்

Tags : #ABANDONED HOSPITAL #ONLINE #மருத்துவமனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Abandoned hospital inside pics surfaces on online | World News.