தனது எனர்ஜி டிரிங்கை ரசிகர் கையில் கொடுத்து அழகு பார்த்த சிராஜ்.. வைரலாகும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 02, 2023 10:59 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.

Mohammed Siraj gesture to young fan in third test gone viral

                               Images are subject to © copyright to their respective owners

முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னேறிவிடும்.

அப்படி இருக்கையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

வெற்றி பாதையில் ஆஸ்திரேலியா?

தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தாலும் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 11 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது.

Mohammed Siraj gesture to young fan in third test gone viral

Images are subject to © copyright to their respective owners

தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடி இருந்த இந்திய அணிக்கு சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது. ரோகித், கோலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற புஜாரா மட்டும் நிலைத்து நின்று ரன் சேர்த்தபடி இருந்தார். ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த காரணத்தினால் பெரிய அளவிலான ரன்களையும் இந்திய அணியால் குவிக்க முடியவில்லை. புஜாரா 59 ரன்களில் அவுட்டான சூழலில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலியா அணி எளிதில் இலக்கை எட்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சிராஜின் நெகிழ்ச்சி செயல்

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் போட்டிக்கு நடுவே செய்த நெகழ்ச்சியான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Mohammed Siraj gesture to young fan in third test gone viral

Images are subject to © copyright to their respective owners

இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பவுண்டரி லைனுக்கு அருகே ஃபீல்டிங் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அருகே இருந்த ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக கத்திக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எனர்ஜி டிரிங்க் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு பவுண்டரி லைனைத் தாண்டி வந்த சிராஜ், அங்கே இருந்த இளம் ரசிகர் ஒருவருக்கு எனர்ஜி டிரிங்கை கொடுத்தார்.

 

 

சிராஜ் அப்படி செய்து முடித்ததுமே அந்த இளம் ரசிகர் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்ததாகவும் சொல்லப்படுகிறது. இளம் ரசிகருக்காக இந்திய வீரர் முகமது சிராஜ் செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #IND VS AUS #MOHAMMED SIRAJ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mohammed Siraj gesture to young fan in third test gone viral | Sports News.