"கிரிக்கெட்டோட தீர்க்கதரிசிங்க இவரு? 😅".. தினேஷ் கார்த்திக் சொன்ன அடுத்த பந்தில் நடந்த அற்புதம்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | யப்பா நம்ம உமேஷ் யாதவா இது?.. அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்.. விராட் கோலி ரியாக்ஷனை பாருங்க 😅.. வீடியோ..!
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள சூழலில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. தொடர்ந்து ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து, தற்போது இரண்டாவது நாள் ஆட்டமும் ஆரம்பமாகி உள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்களை கடக்குமா என்ற கேள்வி இருந்தது. 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தவித்தது. அப்போது ஆட வந்த உமேஷ் யாதவ், 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி என வேகமாக ரன் சேர்க்க இந்திய அணி 100 ரன்களையும் கடந்திருந்தது.
இந்த நிலையில், உமேஷ் யாதவ் சிக்ஸ் அடிப்பதற்கு முன்பே அதனை தினேஷ் கார்த்திக் சரியாக கணித்த விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், உமேஷ் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பேசிய தினேஷ் கார்த்திக், "இப்போது அவர் சிக்ஸ் அடிப்பார். ஒருவேளை சிக்ஸ் போகும், இல்லையென்றால் அவர் அவுட் ஆவார்" என கணித்திருந்தார். அவர் கணித்தது போலவே லயன் வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி இருந்தார் உமேஷ் யாதவ். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்யாது என ஆஸ்திரேலிய ஜாம்பவான் மார்க் வாக்கிடம் சவால் விட்டிருந்தார். தினேஷ் கார்த்திக் கணித்தது போலவே அந்த போட்டியில் இந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸ் ஆடாமல் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
I loved this moment ... Hahah 😁🤞#prediction https://t.co/nuIEPlCZ3r
— DK (@DineshKarthik) March 1, 2023
Also Read | "Fake Account-ல இருந்து அவசரம்னு பணம் கேட்டு மெசேஜ்".. பிரபல இயக்குநர் நடிகர் ரவி பரபரப்பு புகார்..!

மற்ற செய்திகள்
