மகளிர் தின ஸ்பெஷல்.. நடிகை நமீதா செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளிர் தினத்தை முன்னிட்டு தனக்கு நெருக்கமான பெண்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகளை அளித்திருக்கிறார் நடிகை நமீதா. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Image Credit : Namitha | Instagram
நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா (2004) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோருடன் முறையே பில்லா மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சத்யராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிக்பாஸ் சீசன்-1 ல் போட்டியாளராகவும் தடம் பதித்தவர். நமிதா, 2019ல் பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.
Image Credit : Namitha | Instagram
திருமணம் மற்றும் குழந்தைகள்
நமீதா, வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அண்மையில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (கிருஷ்ண ஆதித்யா, கியான் ராஜ்) பிறந்துள்ளன என அறிவித்திருந்தார். குரோம் பேட்டை ரீலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
Image Credit : Namitha | Instagram
பரிசு
இந்த சூழ்நிலையில் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் தனது மாமியாருக்கு காஞ்சிபுரம் சேலையை பரிசாக அளித்த நமீதா மகப்பேறு காலத்திலும் அதற்கு பிறகும் தனக்கு பக்கபலமாக இருந்ததாக கூறி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார்.
Image Credit : Namitha | Instagram
தொடர்ந்து தனக்கு நெருக்கமான பெண்களுக்கு துபாயில் இருந்து பரிசுகளை வரவழைத்து அன்புடன் அளித்து மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, பெண் மருத்துவர், ஆராய்ச்சியாளர் ஆகியோருக்கும் நமீதா பரிசுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
